புதுச்சேரி தேர்தல்: தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ்-தி.மு.க. ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும் களமிறங்க உள்ளது.
ஆனால் தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் தேமுதிக தனித்து களம் காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பாகூரில் வி.பி.பி.வேலு, காலாப்பட்டில் ஹரிகரன், உப்பளத்தில் சசிக்குமார், திருநாள்ளாறில் ஜிந்தா என்கிற குரு, நெடுங்காடு கோட்டூச்சேரியில் ராம்டீ ஞானசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.