முகப்பு
உலகம்

மத்திய கிழக்கு போரால் லெபனானில் 7.8 லட்சம் பேர் இடமாற்றம்!

லெபனானில் 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து...

Updated On : 11 மார்ச், 2026 at 10:31 AM
போரால் லெபனானில் இதுவரை 7.8 லட்சம் பேர் இடமாற்றம்
பகிர்:

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் இதுவரை 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதால் தெற்கு லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், லெபனான் அதிபர் ஜோசஃப் ஆவூன் உடன் புதன்கிழமை (மார்ச் 11) காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் சமூக விவகார அமைச்சர் ஹனீன் சையத், லெபனானில் போரால் இதுவரை 7,80,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“போரால் இடமாற்றம் செய்யப்பட்ட 1,20,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த விமானம் செவ்வாய்க்கிழமை லெபனான் வந்தடைந்தது. மேலும், ஜோர்டான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்தும் நிவாரண உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரானின் படைகளுக்கும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

more than 780,000 people have been displaced in Lebanon due to war.

முழு கட்டுரையைப் படிக்க →