முகப்பு
தமிழ்நாடு

முதல்வருக்கு இன்று கரோனா தடுப்பூசி

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 11) கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்)
பகிர்:

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 11) கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார்.

காலை 9.15 மணிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அதனைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக முதியவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 9.15 மணியளவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →