தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர்: சீமான் 
தமிழ்நாடு

தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர்: சீமான்

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். 

DIN

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியது:

தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி உள்ளனர். இதை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். தனி முதலாளிகளால் கல்வி, தண்ணீர் கொடுக்கும் போது அரசால் ஏன் செய்ய முடியாது
நாங்கள் கல்வி, குடிநீரை இலவசமாகக் கொடுக்க நினைக்கின்றோம். தமிழ்நாட்டில்  ஊழல் செய்யும் நோக்கில் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையால் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

திமுக,அதிமுகவை வெல்ல வைப்பது வழக்கமான நிகழ்வு, நாம் தமிழரை வெற்றி பெற  வைப்பது ஒரு வரலாறு. இந்த முறை உதய சூரியன், இரட்டை இலையை மறந்து விவசாயியை நினைத்து வாக்களியுங்கள்.
ஒரு முறை 5 ஆண்டுகள் எங்களை நம்பி ஒப்படையுங்கள்.

விவசாயியை நன்றியுடன் நினைவு கூறுங்கள். வாக்குப் பதிவில் விவசாய சின்னத்தில் நன்றி எனத் தொடுங்கள். நாடும் மக்களும் நன்றாக வாழ நாம் தமிழர் ஆள வேண்டும் எனப் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT