காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன்
காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெயர்: மு.பெ.சாமிநாதன்
வயது:56 (05-05-1964)
தகப்பனார்:பெருமாள்சாமி கவுண்டர்
தாயார்:தங்கமணி அம்மாள்
மனைவி:உமாதேவி
மகன்:சா.ஆதவன்
மகள்: சிவசம்யுத்தா
படிப்பு:பி.ஏ.
ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டர்
முகவரி: 101,ஏ பங்களாத்தோட்டம், காங்கயம் சாலை, முத்தூர்-638105
தொழில்: விவசாயம்
அரசுப் பதவிகள்: வெள்ளகோவில் தொகுதியில் 1996,2001, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
கட்சிப் பதவிகள்: வெள்ளகோவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர், மாநில இளைஞரணி துணை செயலாளர், திருப்பூர் மாவட்டச் செயலாளர், மாநில இளைஞரணி இணை செயலாளர், திமுக இளைஞரணி செயலாளர், தற்போது கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
தேர்தல் அனுபவம்: வெள்ளகோவில் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு மடத்துக்குளம் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு திருப்பூர் வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.