தமிழகத்தில் புதிதாக 695 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 695 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 695 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 695 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,58,967 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் 512 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,41,762 பேர் குணமடைந்துள்ளனர். 12,543 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 4,662 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.