நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர். என்.ராஜேஷ் குமார். 
தமிழ்நாடு

நாமக்கல்லில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு) தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

நாமக்கல்: நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு) தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. 
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர்.என். ராஜேஷ் குமார் தலைமை வகித்து நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெ. ராமலிங்கம், ராசிபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் எம்.மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் கே. பொன்னுசாமி ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் மூன்று தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற வேண்டும். கட்சியினர் பகைமையை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்வது பெற்றோருக்கு செய்யும் துரோகமாகும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சி தொண்டர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT