தமிழ்நாடு

பஹ்ரைனில் ஜேஇஇ தேர்வு மையம்: வைகோ கோரிக்கை ஏற்பு

DIN

பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஜேஇஇ பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். 

ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி தமிழர் பேரவைத் தோழர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

வைகோ இது தொடர்பாக, மத்திய அரசின் கல்வி அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் வழியாக கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பஹ்ரைன் நாட்டின் இந்தியத் தூதரக வளாகத்தில் தேர்வு மையம் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வைகோவின் முயற்சியால் பஹ்ரைனில் ஜேஇஇ தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது குறித்து அங்கு வாழும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT