முகப்பு
தமிழ்நாடு

அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின்: அதிமுக தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கையை  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று (மார்ச் 14) மாலை 6 மணிக்கு வெளியிட்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேர்தல் அறிக்கையை இருவரும் வெளியிட்ட பின்னர், அதிமுக மூத்த தலைவரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் தேர்தல் அறிக்கையினை வாசித்தார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

  • குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும்.
  • அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் 'அம்மா இல்லம் திட்டம்'.
  • மகளிர் நலம் காக்கும் 'குலவிளக்குத் திட்டம்'.
  • மகளிருக்கு பேருந்து சலுகை.
  • ரேஷன் பொருள்கள் வீடு தேடிவந்து கொடுக்கப்படும்.
  • ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.
  • அம்மா துணி துவைக்கும் இயந்திரம் வழங்கும் திட்டம்.
  • கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி இலவச டேட்டா.
  • வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.
  • முதியோருக்கான ஊதியத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 -ஆக உயர்வு.
  • மத்திய அரசு பணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.
  • தமிழ் மொழிப்பாடம் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும்.
  • உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.
  • ஈழத்தமிழர்கள் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவர்.
  • ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிரந்தரதீர்வு.
  • காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு.
  • வேளாண் விளை பொருள்கள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு உருவாக்கப்படும்.
  • பனைமரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.
  • ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும்.
  • நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.
  • நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.
  • மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்.
  • 100 நாள்கள் வேலை 150 நாள்களாக உயர்த்தப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு.
  • மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.
  • நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவிகித பயணக் கட்டண சலுகை. 
  • நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் 
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்.
  • கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.
  • அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன்
  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் 
  • இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.
  • 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம்.
  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை.
  • ரூ.25,000 மானியத்தில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ திட்டம்.
  • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும்.
  • மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
  • திருநங்கைகளுக்கு சிறுதொழில் மானியம் ரூ.20,000-ல் இருந்து
    ரூ.50,000 ஆக உயர்வு. 
  • கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்
    ரூ.1000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்வு. 
முழு கட்டுரையைப் படிக்க →