முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 67,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் புதிதாக 759 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,59,726ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 547 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,42,309-ஆக உள்ளது. 
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,870 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,547-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments