முகப்பு
தமிழ்நாடு

தஞ்சை: அம்மாபேட்டையில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் 5 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
தஞ்சை: அம்மாபேட்டையில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் 5 பேருக்கு கரோனா
பகிர்:

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,200 மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கரோனா தொற்று இருப்பது மாா்ச் 13, 14 ஆம் தேதிகளில் தெரிய வந்தது.

இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகள் வசிக்கும் அம்மாபேட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட 24 கிராமங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என சுமார் 350 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மாணவிகளின் பெற்றோா் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

மேலும், மற்றவா்களுக்கு எடுக்கப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகள் சில நாள்களில் வெளியாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments