சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

DIN

சேலம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில்,  விமானம் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை ஸ்டாலின் வந்தார்.  இங்கு அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதன் பின்னர் அவர் திறந்த வேனில் சேலம் சத்திரம் பகுதிக்கு வந்தார்.

செவ்வாய்ப்பேட்டை கடைவீதி பகுதிக்கு வந்து வேனிலிருந்து இறங்கி நடந்துச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். ஸ்டாலின் செவ்வாய்ப்பேட்டை கடை வீதி பகுதியில் நடந்து செல்வதை அறிந்த திரளான பொதுமக்கள் அங்கு குழுமினர். பலர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்  தெருக்களில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

 அப்போது அவருடன் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் , சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். சேலம் அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு  தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் ஆகியோருக்கு ஸ்டாலின் வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT