ஈரோடு மேற்கு: திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்
திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான சு. முத்துசாமி போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான சு. முத்துசாமி போட்டியிடுகிறார்.
இதற்காக கடந்த சில நாட்களாக அவர் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று திமுக சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று ஈரோடு ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.