இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும்: வேதாரண்யத்தில் பழனிசாமி பேச்சு
இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும் என முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.
தமிழ்நாடுஇந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும்: வேதாரண்யத்தில் பழனிசாமி பேச்சு
இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும் என முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.
வேதாரண்யம்: இந்தத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார், ஆனால், இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும் என முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி இன்று மதியம் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசிய போது, அதிமுக காணாமல் போகும் என பேசி வரும் ஸ்டாவின், வேதாரண்யத்தில் கடல் போல கூடியுள்ள இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தெரியும்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கவும், மீனவர்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணம் மாதம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என பேசினார்.