முகப்பு
தமிழ்நாடு

'தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் 2 ஆம் டோஸ் போட்டுக்கொள்ளவில்லை'

தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் கரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் கரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 

Advertisement

கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

அந்தவகையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸை 2.46 லட்சம் செலுத்திக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸை 1.43 லட்சம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments