தமிழ்நாடு

'அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பதில்

DIN

அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன் என செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமமுக குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, 'அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன்; தேவையில்லாமல் பிரச்னையை கிளப்பாதீங்க' என்று கூறியுள்ளார். 

இவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கண்டனங்களும் எழுந்துள்ளன. 

சிவகாசியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT