திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளரின் வாகனத்தை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுயேட்சையாக போட்டியிடும் பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுயேட்சையாக போட்டியிடும் பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 12 ஆம் தேதி தொடங்கியது. இதன்படி திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுயேட்சையாகப் போட்டியிடும் பெண் வேட்பாளர் மலர்விழி (44) என்பவர் மனு வாங்குவதற்காக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளார். ஆனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரது வாகனத்தை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக மலர்விழி, மற்ற கட்சி வேட்பாளர்களின் வாகனங்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் நீங்கள் ஏன் எனது வாகனத்தை அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் பிரகாஷ் அவரை சமாதனப்படுத்தி உள்ளே அனுப்பிவைத்தார். இந்த சம்பவம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பாக சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.