அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்
பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சல அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தோப்பு வெங்கடாச்சலத்தை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருந்துறை தொகுதியில் வேட்பாளர் ஜெயகுமாரை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார்.
இவா் பெருந்துறை தொகுதியில் 2011, 2016 ஆகிய சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
2011 முதல் 2016 வரை வருவாய்த் துறை, பின்னா், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தாா். 2016-ல் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தாா்.
வெங்கடாச்சலத்துக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்காததால், அவா் சுயேச்சையாக வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.