கம்பத்தில் ரத்ததான முகாம்
தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்.டீ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்.டீ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அப்துல் வாஜிது தலைமையில் தொழிற்சங்க நகரத் தலைவர் அஜ்மீர் அலி முன்னிலையில் நடைபெற்றது
துணைத்தலைவர் சர்புதீன், பொருளாளர் ஜெய்லானி, செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்சலாம், பால் பாண்டியன், சிராஜ்தீன், ஆட்டோ சங்க தலைவர் மைதீன், செயலாளர் அஷ்கர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
ஏற்பாடுகளை கம்பம் அரசு மருத்துவமனை, ரத்ததான பிரிவு மருத்துவக் குழுவினர், எஸ்.டீ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் செய்திருந்தனர்.