விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்ற அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன். 
தமிழ்நாடு

விழுப்புரத்தில் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் அருகருகே அமர்ந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்பு

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் ஆகியோர் அருகருகே அமர்ந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றனர்

DIN

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் ஆகியோர் அருகருகே அமர்ந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றனர். 

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது. தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 36 பேரின் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் வேட்புமனுக்களை பரிசீலனை மேற்கொண்டார்.

இதில், அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வேட்புமனுவும், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து மற்ற வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

வேட்பு மனு பரிசீலனைக்கு வந்த அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் கைகளை கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொண்டதுடன்,  அருகருகே அமர்ந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT