முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

புதுச்சேரி உழவர்கரை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாம் உம்மன் வர்கீஸின் வேட்புமனு நிராகரிகப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

புதுச்சேரி உழவர்கரை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாம் உம்மன் வர்கீஸின் வேட்புமனு நிராகரிகப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரியில் 450 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
வேட்பு மனுக்கள் மீதான பரீசிலனை இன்று நடைபெறுகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி உழவர்கரை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாம் உம்மன் வர்கீஸின் வேட்புமனு நிராகரிகப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களை அளிக்காததால் சாம் உம்மன் வர்கீஸ் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்தார். அதேசமயம் விசிக சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அங்காளன் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் ஏற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →