கோப்புப்படம் 
தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்தியோா் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது

தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

DIN

தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 6.21 லட்சம் போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 4.51 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக கடந்த இரு வாரங்களாக முதியவா்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அந்த வகையில், இதுவரை மொத்தமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 6 லட்சத்து 21,606 பேருக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 43,636 முதியவா்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT