ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராசிபுரம் சிவாலாய குளத்தை தூர்வாரும் பணி
ராசிபுரம் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை தமிழகம் முழுவதுமிருந்து திரண்ட 300-க்கும் மேற்பட்ட சிவனடியார் கூட்ட தொண்டர்கள் தூர்வாரி செம்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை தமிழகம் முழுவதுமிருந்து திரண்ட 300-க்கும் மேற்பட்ட சிவனடியார் கூட்ட தொண்டர்கள் தூர்வாரி செம்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் உள்ளது. கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்ட வல்வில் ஓரி மன்னன் கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம், இதனை ஒட்டிய தெப்பக்குளம் கோவிலின் அருகில் உள்ளது. கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் கோவிலின் தேர்திருவிழாவின் போது தெப்பத்திருவிழா, பிரமோற்சவம் தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு, சுவாமி குளத்தில் நீராடி அழைத்துச் செல்வர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டு வந்த இதுபோன்ற திருவிழாக்கள், வறட்சி காரணமாக குளத்தில் நீர் வறண்டு போனதால், தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்து வந்தது. இதனால் நீர் நிரம்பிய இந்த குளம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிப்போனது.
Advertisement
இந்நிலையில், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை தொண்டர்கள் சார்பில், சீரமைக்கப்பட்டு மீண்டும் சித்தி்ரை தேர் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆர்.ராதாகிருஷ்ணன், கரூர் சரவணன் ஆகியோர் இதனை பார்வையிட்டு சீரமைக்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தேனி, கரூர், சேலம், கடலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உத்ராட்ச மலை அணிந்த, நெற்றியில் விபூதி பூசியவாறு திரண்ட 300-க்கும் மேற்பட்ட சிவனடியார் தொண்டர்கள் தெப்பக்குளத்தில் இறங்கி தூர்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
மீண்டும் குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பு சித்திரை மாதங்களில் நடைபெறும் தெப்ப உற்சவம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தவிருப்பதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள சிவனடியார் தொண்டர்கள் தெரிவித்தனர்.