முகப்பு
தமிழ்நாடு

3ஆவது நாளாக 1000-ஐ தாண்டிய தினசரி பாதிப்பு : தமிழகத்தில் ஒரேநாளில் 1,289 பேருக்கு கரோனா

தமிழகத்தில் தொடா்ந்து 3ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. 

Updated On : 21 மார்ச், 2021 at 6:37 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:18 AM

தமிழகத்தில் தொடா்ந்து 3ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 75258 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,66,982ஆக உயர்ந்துள்ளது.  கரோனா தொற்றிலிருந்து மேலும் 668 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,46,480-ஆக உள்ளது. 
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,903 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,599-ஆக உயா்ந்துள்ளது. 
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 466 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.