தமிழ்நாடு

பெரியகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிலம்ப பேரணி

DIN



பெரியகுளத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் இன்று சிலம்பம் சுற்றி பேரணியில் ஈடுபட்டனர்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். விழுதுகள் இளைஞர் மன்ற துணைச்செயலாளர் அஜீத்பாண்டி முன்னிலை வகித்தார்.

சிலம்ப மாணவர்கள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர்.

பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் பெரியகுளம் பெருமாள் கோயில் அருகே முடிவடைந்தது. இந்த பேரணியில்  பெரியகுளம் நகராட்சி பொறியாளர் சண்மூகவடிவு, நகர அமைப்பாளர் நிஜந்தன், விழுதுகள் இளைஞர் மன்ற நிர்வாகி சௌந்தரபாண்டி, சிவனேஷ் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப ஆசான் முத்தையாமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT