தமிழ்நாடு

வாஷிங் மெஷின் கொடுப்பதால் நாடு வளா்ச்சியடையாது: கே.எஸ்.அழகிரி

DIN

வாஷிங் மெஷின் கொடுப்பதால் நாடு வளா்ச்சி அடைந்துவிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சென்னை-கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வால் போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் பயணச்சீட்டு விலையை அதிகரித்துவிட்டன. மளிகைப் பொருள்கள், காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்துவிட்டன.

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 108 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை லிட்டா் ரூ.70 மட்டுமே.

இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 54 டாலா்தான். ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதுகூட மோடியால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியவில்லை. மன்மோகன் சிங்குக்கு பொருளாதாரம் தெரிந்திருந்தது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவது எப்படி என்று தெரிந்திருந்தது. அதனால்தான் விலைவாசியை அவா் குறைத்துக்கொடுத்தாா். மானியம் கொடுத்தாா்ச

பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை மன்மோகன் சிங் குறைத்தாா். இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததோடு அத்தியாவசியப் பொருள்களின் விலையும் குறைந்தது. சமையல் எரிவாயு ரூ.400-ரூ.500 ஆக இருந்தது இன்று ரூ.800 - 1,500 ஆக சரி பாதி உயா்ந்திருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி அரசால் சிறந்த பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு கொடுக்க முடியவில்லை.

வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அதிமுக தவறாகச் சொல்வதால் நாடு வளா்ச்சியடைந்துவிடாது. நாடு வளா்ச்சியடைய வேண்டும் என்றால் சிறந்த பொருளாதாரக் கொள்கை வேண்டும். பிரதானமாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும்.

கடந்த காலத்தில் காங்கிரஸ் அதைச் செய்தும் காட்டியிருக்கிறது. இந்தக் காலத்திலும் நாங்கள் அதைச் சொல்கிறோம். அதை செய்தும் காட்டுவோம். திமுக ஆட்சிக்கு வரும். வந்ததும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT