அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் 
தமிழ்நாடு

துணி துவைத்த அதிமுக வேட்பாளர்: வாஷிங் மெஷினுக்கு வாக்குறுதி (விடியோ)

​நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் தேர்தலில் வெற்றி பெற்றால் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என துணி துவைத்து வாக்குறுதியளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

DIN


நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் தேர்தலில் வெற்றி பெற்றால் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என துணி துவைத்து வாக்குறுதியளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்க. கதிரவன் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து, அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என கைகளில் துணி துவைத்தபடி வாக்குறுதி அளித்து நேற்று (திங்கள்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார். அவரது ஆதரவாளர்கள் இதை வரவேற்கும் விதமாக கைகளைத் தட்டி அவருக்கு ஆதரவான முழக்கத்தை எழுப்பினர்.

அவர் துணி துவைக்கும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT