அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அமமுக உருவெடுக்கும்: ஒவைசி
டிடிவி தினகரன் தலைமையிலான மெகா கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றாக உருவெடுக்கும் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தலைமையிலான மெகா கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றாக உருவெடுக்கும் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
"டிடிவி தினகரன் தலைமையிலான இந்த மெகா கூட்டணி மூன்றாவது அரசியல் மாற்றாக உருவெடுக்கும். இங்கு அரசியல் வெற்றிடம் உள்ளது. இரண்டு அரசியல் கட்சிகளை மையமாகக் கொண்டு இயங்கும் அரசியலை தமிழக மக்கள் இனியும் விரும்பமாட்டார்கள்.
அனைத்துக் கூட்டணி கட்சிகளின் கடின உழைப்பால் இந்த வெற்றிடத்தை எங்களால் நிரப்ப முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். டிடிவி தினகரனின் அரசியல் கணிப்பு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருக்கு எங்களது கட்சி முழுமையாக துணை நிற்கிறது."