முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் 1,600-ஐ தாண்டியது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 1,636 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
தமிழகத்தில் ஒரேநாளில் 1,600-ஐ தாண்டியது கரோனா பாதிப்பு 
பகிர்:

தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 1,636 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 633 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,70,003 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இன்று 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,630 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 80,293 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,023 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது 9,746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →