ஒரேமேடையில் பிரசாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின்-ராகுல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் வரும் மார்ச் 28-ம் தேதி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் மார்ச் 28-ம் தேதி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறவுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்கு மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.