முகப்பு
தமிழ்நாடு

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு

திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதில், அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளரான எஸ்.ராஜசேகரும், திமுக சார்பில் தங்கம் தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். 
இந்த நிலையில் திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
மனுவில், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்ககுவதாக குறிப்பிட்டுள்ள அவர் இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். 
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.