முகப்பு
தமிழ்நாடு

தஞ்சை: மேலும் 20 மாணவர்களுக்கு கரோனா

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கல்லூரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
கோப்புப்படம்
பகிர்:


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கல்லூரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், தஞ்சாவூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 பேர், திருவையாறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு நேற்று (மார்ச் 24) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று 20 கல்லூரி மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

தமிழகம் முழுக்க கரோனா பரவி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் அடுத்தடுத்து கரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →