முகக்கவசம் அணியாததே கரோனா பரவக் காரணம்: ராதாகிருஷ்ணன்
முகக்கவசம் அணியாததே தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவக் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாததே தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவக் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா அதிகரிப்பதற்கு வெளிநாடுகளில் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமில்லை. தமிழகத்தில் மக்கள் முகக்கவசம் அணியததாலேயே கரோனா மீண்டும் பரவி வருகிறது. முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிடக் கூடாது.
25 லட்சம் கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.