தமிழ்நாடு

மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிர்வுடன் பயங்கர சத்தம்:  வட்டாட்சியர் விளக்கம்

DIN


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம்தான் காரணம் என்று வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது குறித்து மாவட்ட வட்டாட்சியர் பிரான்சுவா விளக்கம் அளித்துள்ளார்.

பயங்கர சத்தம் கேட்டதாக வந்த புகாரினை அடுத்து, கோவாங்குடியில் நேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் பிரான்சுவா, இந்த வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானம்தான் காரணம். அந்த நேரத்தில் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை.

ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது உண்டானதே இந்த பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வு. எனவே மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT