முகப்பு
தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கரோனா

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பகிர்:

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியான நிலையில் அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், தந்தைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று திருவந்திபுரம் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். 

Advertisement

முன்னதாக, வேளச்சேரி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ்பாபு, அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments