முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,86,673 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 969 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 1,527 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,58,075 பேர் குணமடைந்துள்ளனர். 12,719 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இன்றைய நிலவரப்படி 15,879 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்தாண்டு இதே தினத்தில் 56 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments