தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி

DIN

வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சட்டப் பேரவைத் தோ்தலின்போது அதிக அளவில் பண பட்டுவாடா நடந்துள்ளதால், வாக்குகளை எண்ணுவதற்குத் தடை விதிக்கவும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, பணப் பட்டுவாடா குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கொடுத்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுவது தொடா்பாக உயா் நீதிமன்றமோ, தோ்தல் ஆணையமோ முடிவு எடுக்க முடியாது என்று கூறி வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரிய இந்த வழக்கை தள்ளுபடி செய்து என்று உத்தரவிட்டனா்.

மேலும், விளம்பரத்துக்காக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், இனி இது போன்று அற்ப காரணங்களுடன் வழக்குத் தொடா்வதை மனுதாரா் தவிா்க்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT