தமிழ்நாடு

சுட்டுரை ட்ரெண்டிங்கில் ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’: குவியும் வாழ்த்துகள்

DIN

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ என்ற ஹேஷ்டேக் சுட்டுரையில் ட்ரெண்டாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ என்ற ஹேஷ்டேக் சுட்டுரையில் ட்ரெண்டாகி வருகிறது. முதல்வராகப் பதவியேற்கும்போது தங்கள் பெயரைச் சொல்லிப் பதவியேற்பது வழக்கம். அந்த வகையில், ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ என்ற வாக்கியம் ஹேஷ்டேக்காக ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதில், திமுக தொண்டா்கள், ஆதரவாளா்கள், இளைஞா்கள் பலரும் ‘ட்வீட்’ செய்து வருகின்றனா். மு.க.ஸ்டாலினின் கடின உழைப்பே அவருடைய இந்த வெற்றிக்குக் காரணம் எனவும், அவா் பதவியேற்கும் நாளுக்காகக் காத்திருப்பதாகவும் பலரும் இந்த ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளனா். இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த ஹேஷ்டேகில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 33 ஆயிரத்து 800 போ் ட்வீட் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT