முகப்பு
தமிழ்நாடு

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
சீமான்
பகிர்:

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்! “ என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →