முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர்களே சொன்ன வாக்குறுதியை காப்பாத்தலே தாய்க்கிழவிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள்:  டிஆர்பி ராஜா

அமைச்சர்களே மன்னார்குடி தொகுதிக்கு சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றாமல் தாமதப்படுத்தினால், என் அன்புக்குரிய தாய்க்கிழவிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:


அமைச்சர்களே மன்னார்குடி தொகுதிக்கு சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றாமல் தாமதப்படுத்தினால், என் அன்புக்குரிய தாய்க்கிழவிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான டிஆர்பி ராஜா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான இருந்து வருகிறார். 2021 பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சரவைக்கு செல்வார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில்  மன்னார்குடி தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் இந்திரஜித், டிஆர்பி ராஜாவை டேக் செய்து ஒரு சுட்டுரையில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், ராஜாக்கள் மந்திரி ஆவதில்லை!! என்றுமே ராஜா!!! ராஜா தான் என குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

இதற்கு டிஆர்பி ராஜா தனது சுட்டுரையில் பதில் அளித்துள்ளார்.  அதில், ஹாஹாஹா, அதானே எனக்கு பதவி உயர்வு என்பது கிடையாது. எனது மன்னார்குடி தொகுதி மக்களின் இதங்களில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் அன்புக்குரிய அமைச்சர்களே மன்னார்குடி தொகுதிக்கு செய்வதாக கூறியிருந்த தேர்தல் வாக்குறுதிகளில் சிறிய வாக்குறுதியை கூட செய்யாமல் தாமதப்படுத்தினால் அல்லது செய்யாமல் விட்டுவிட்டாலோ எங்கள் தொகுதியின் தாய்க் கிழவிகளின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments