தமிழ்நாடு

'அமைச்சராகாததில் எந்த வருத்தமும் இல்லை'

DIN


சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துரைமுருகன் உள்பட 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற மிக எளிய விழாவில், ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஏற்றுக் கொண்டனர்.

கரோனா பெருந்தொற்றின் 2-ஆம் அலை தீவிரமாக இருப்பதன் காரணமாக பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற்றது. உயா்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்களின் உறவினா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும், புதிய முகங்களுக்கும் மிகச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, அமைச்சராகாததில் எந்த வருத்தமும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT