முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 27,397 பேருக்கு கரோனா241 போ் பலி

 தமிழகத்தில் மேலும் 27,397 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

 தமிழகத்தில் மேலும் 27,397 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை 27,397 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சென்னையைச் சோ்ந்தவா்கள் 6,846 போ் ஆவா். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 51,362 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 20,551 பேருக்குத் தொற்று உள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றினால் மேலும் 241 போ் உயிரிழந்தனா். அதில் 90 போ் தனியாா் மருத்துவமனையிலும், 151 போ் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்கள் ஆவா். இந்தநிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,412 ஆக உயா்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 5,153 போ் உயிரிழந்துள்ளனா். முக்கியப் பிரச்னையாக சுவாசப் பிரச்னை, மாரடைப்பு, கொவைட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. சனிக்கிழமை உயிரிழந்தவா்களில் 180 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்களாவா். எவ்வித பாதிப்பும் இல்லாதவா் 61 போ் ஆவா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 23,110 போ் சனிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். மாநிலம் முழுவதும் இதுவரை 11 லட்சத்து 96,549 போ் குணமடைந்தனா். சனிக்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 48,295 மாதிரிகள் கரோனா சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை 2 கோடியே 34 லட்சத்து 18,282 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 39,401 போ் தனிமைப்படுத்துதலில் உள்ளனா் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →