முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கரோனா தொற்று காரணமாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்கவில்லை. 

சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.