மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!
மார்ச் மாதம் 1.39 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
நாட்டில் மின்சார இருசக்கர வாகன விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து, மார்ச் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.31 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 1.39 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் போன்றவை மின்சார இருசக்கர வாகனத்திற்கான உள்ளூர் சந்தை வளர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளன.
Advertisement
Advertisement
இதுமட்டுமின்றி மின்சார வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஏத்தர், ஓலா போன்ற நிறுவனங்கள் கோடைகாலத்தையொட்டி அறிவித்துள்ள சலுகைகளும் அதிக விற்பனைக்கு காரணமாகியுள்ளது.
முன்பு இருந்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் மின்சார இருசக்கர வாகனத்தை தேர்வு செய்துள்ளனர்.
2026 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1.35 மில்லியன் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1.15 மில்லியனாக இருந்தது. இதன்மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 17% அதிகமாக மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 2.38 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 3.3 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனட்தில் கடந்த ஆண்டு 2.31 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு 2.76 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
இதோபோன்று ஏத்தர் நிறுவனத்தில் 2.3 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இது 1.31 லட்சமாக இருந்தது.
எதிர்பாராத வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்து 1.39 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
electric 2W sales hit a total sales reaching 1.39 lakh units as of March
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.