மின்சாரப் வாகனங்களின் விற்பனை 81.20% அதிகரிப்பு!
மின்சாரப் பயணிகள் வாகனங்களின் விற்பனை, கடந்த ஆண்டு மே மாதம் விற்பனையான 14,725 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் மே மாதத்தில் 81.2 சதவீதம் அதிகரிப்பு.
புதுதில்லி: இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகனங்களின் விற்பனை, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 14,725 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் மே மாதத்தில் 81.2 சதவீதம் அதிகரித்து 26,682 வாகனங்களாக இருப்பதாக வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று தெரிவித்தது.
டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட், கடந்த மாதம் 10,340 வாகனங்களை விற்பனை செய்து தொடர்ந்து முன்னிலை வகித்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 5,083 வாகனங்களுடன் ஒப்பிடும் போது இது 103.42 சதவீத வளர்ச்சியாகும் என்றது ஃபாடா.
மஹிந்திரா & மஹிந்திரா 6,210 வாகனங்களை விற்பனை செய்து 2வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு 2,891 வாகனங்களை விற்பனை செய்து 114.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
Advertisement
Advertisement
எம்ஜி மோட்டார் இந்தியா 4,984 வாகனங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இது 4,599 வாகனங்களாக இருந்தது.
மின்சார இருசக்கர வாகனப் பிரிவில், கடந்த மாதம் மொத்த விற்பனை 62.76 சதவீதம் அதிகரித்து 1,70,733 வாகனங்களாக பதிவானது. இதுவே கடந்த ஆண்டு, மே மாதத்தில் இது 1,04,896 வாகனங்களாக இருந்தது.
டிவிஎஸ் மோட்டார் இப்பிரிவில், கடந்த ஆண்டு மே மாதத்தில் 25,804 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு மே மாதம் விற்பனையான 42,459 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 64.54 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது, முன்னிலை வகித்தது.
பஜாஜ் ஆட்டோ 39,202 வாகனங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஏதர் எனர்ஜி 28,240 வாகனங்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
கடந்த மாதம் மொத்த மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 71,867 வாகனங்களாக பதிவானது. இதுவே கடந்த ஆண்டு மே மாதம் இது 66,185 வாகனங்களாக இருந்தது.
மின்சார வணிக வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனையானது 2,400 வாகனங்களாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இது 1,094 வாகனங்களாக இருந்தது.