முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
தலைமைச் செயலகம்
பகிர்:

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு உயர் அதிகாரிகளின்  பணியிடங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னதாகவே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →