24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி
உலக சாதனை படைக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரியான சங்கீதா, தொடர்ந்து 24 மணி நேரம் ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.
உலக சாதனை படைக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரியான சங்கீதா, தொடர்ந்து 24 மணி நேரம் ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரராகவர் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகள் சங்கீதா(21). இவர் இளங்கலை கணிதம் படித்துள்ளார். இவருக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டு.
இந்நிலையில் வெர்ட்யூ புத்தக உலக சாதனைக்காக டூடுள் ஓவியம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தில் கரோனோ குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை தொடர்ந்து 24 மணி நேரம் வரைய முடிவெடுத்து செவ்வாய்க்கிழமை காலை 7.30மணிக்கு தொடங்கியுள்ளார். இவர் தொடர்ந்து புதன்கிழமை காலை வரை ஓவியம் வரைந்துக் கொண்டிருப்பார்.
Advertisement
Advertisement
இவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.