தமிழ்நாடு

முன்களப் பணியாளர்களுக்கு ரூ.1 கோடி வழங்குக: பாஜக

DIN

கரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த அதிமுக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் தந்தபோது ரூ.1 கோடி தர வேண்டும் என்று திமுக கூறியிருந்தது. 

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றை பேசிவிட்டு ஆளும் கட்சியாக மாறியதும் மாற்றிப் பேசுவது அழகல்ல என்று விமர்சித்துள்ளார். 

கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 12) அறிவித்தார்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலைக் காலமான, ஏப்ரல், மே, ஜூன் -மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT