தமிழ்நாடு

திமுக இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாகவே விளங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN



திமுக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தியாகமும் ஈகையும் இணையத மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: 

தியாகமும் ஈகையும் இணையத மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், இயதப் பெருநாள் அமையட்டும். அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள்.

திமுக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன். பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இயதப் பெருநாள் துணையாகட்டும்!” என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT