முகப்பு
தமிழ்நாடு

சீமானின் தந்தை காலமானார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
சீமானின் தந்தை செந்தமிழன்
பகிர்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் வியாழக்கிழமை  பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 92.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுட்டுரைப் பதிவில்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை, அப்பா செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.

சீமானின் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் சீமானின் தந்தை செந்தமிழன் உயிர் துறந்தார்.

இவருக்கு, மனைவி  அன்னம்மாள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு அரணையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தந்தையை இழந்து வாடும் சீமானுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →